இன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
20 கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுத்ததில் தற்போது வரை ஒன்பது கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக நடவடிக்கையின் காரணமாக மாணவர்களுக்கு செமெஸ்டர் தேர்வு முடிவுகளில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் நேற்று செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சில கல்லூரிகளின் மீது நடவடிக்கை எடுத்ததன் காரணமாக செமஸ்டர் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்து கொள்ளாத தனியார் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. விடைத்தாள் திருத்துவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் நிதி குறித்து கணக்குகள் ஒப்படைக்காத கல்வி நிறுவனங்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 20 கல்லூரிகளின் நிர்வாகத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தற்போது 9 கல்லூரிகள் கணக்கை ஒப்படைத்தும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு பேராசிரியர்களை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தலைமை செயலக முற்றுகை... விவசாயிகள் கைது!!!