இரண்டாம் உலக போருக்கு பிறகு கிருஷ்ணகிரி-ஜோலார்பேட்டை இடையே ரயில் பாதை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்க 2.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது..
சிதலமடைந்த ரயில்வே பாதை:
1942 இரண்டாம் உலக போரின் போது சிதலமடைந்த கிருஷ்ணகிரி - ஜோலார்பேட்டை இடையேயான ரயில்வே பாதை போருக்கு பின்னர் சீரமைக்கபடவில்லை. அதன் பின்னர் ஒவ்வொரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தேர்தல் வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது ஆனால் திட்டம் மட்டும் வந்ததாக தெரியவில்லை.
நிதி ஒதுக்கிய மத்திய ரயில்வே அமைச்சகம்:
இந்நிலையில் தமது முயற்சியின் காரணமாக 98 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில்வே பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 2.45 கோடி ரூபாய் நிதியை மத்திய ரயில்வே அமைச்சகம் ஒதுக்கியுள்ளதாக மக்களவை உறுப்பினர் செல்லக்குமார் தெரிவித்தார்.
மக்களவை உறுப்பினர் செல்லக்குமார்:
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் ரயில்வே தொடர்பு இல்லாத மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தான் என்றார். 70 ஆண்டுகால போராட்டம் , கோரிக்கைக்கு பிறகு இப்போது ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.