பேருந்தை தடுத்து நிறுத்திய சுங்கசாவடி  ஊழியர்கள்...  பயணிகள் சாலை மறியல் போராட்டம்...

கோவில்பட்டி அருகே அரசு பேருந்தினை நிறுத்திய சுங்கசாவடி (டோல்கேட்) ஊழியர்களை கண்டித்து அரசு பேருந்தில் வந்த பயணிகள் சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பேருந்தை தடுத்து நிறுத்திய சுங்கசாவடி  ஊழியர்கள்...  பயணிகள் சாலை மறியல் போராட்டம்...
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் சாலைப்புதூர் சுங்கசாவடி மையத்தில்  சுங்கசாவடி கட்டணம் கட்டவில்லை என்பதால் நெல்லையில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்து சுங்கசாவடி நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பேருந்தில் வந்த பயணிகள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையெடுத்து போலீசார் விரைந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அரசு பேருந்து நடத்துனர் சுங்கசாவடி கட்டணத்தினை கட்டிய பின்னர் பேருந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தார் சாலைப்புதூர் சுங்கசாவடி மையத்தில் இன்று மாலை நெல்லையில் இருந்து மதுரைக்கு அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி சென்றுள்ளது. வழக்கமாக சுங்கசாவடி மையத்தினை கடக்கும் அரசு பேருந்துகளுக்கு, அந்த பதிவு எண்ணுடன் மாதம் தோறும் அரசு போக்குவரத்து கழகத்தினர் சுங்கசாவடி கட்டணத்தினை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சென்று அரசு பேருந்திற்கு சுங்கசாவடி கட்டணம் கட்டவில்லை என்பதால் அந்த அரசு பேருந்தினை செல்வதற்கு சுங்கசாவடி ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. மேலும் கட்டணத்தினை கட்டிவிட்டு செல்லும் படி கூறியுள்ளனர். ஆனால் நடத்துனர் ஏற்கனவே தங்களது அலுவலத்தில் இருந்து செலுத்தி இருக்கலாம் என்று கூறியுள்ளார். 

ஆனால் சுங்க சாவடி ஊழியர்கள் பணம் செலுத்திவில்லை, ஆகையால் அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பேருந்தில் பயணித்த பயணிகளை அரசு பேருந்தினை நிறுத்திய சுங்கசாவடி ஊழியர்களை கண்டித்து திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்த சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் அந்த அரசு பேருந்திற்கு நடத்துனர் சுங்கசாவடி கட்டணத்தினை செலுத்திய பின்னர் செல்ல அனுமதித்தனர். இதனால் பயணிகள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com