வாக்கு எண்ணிக்கை தொடங்கி வெற்றி சான்றிதழ் வழங்கும் வரை சுமூகமாக அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
நாளை காலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில் சித்தோடு போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன் ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை சம்மதமாக ஈரோடு காவல் துறை சார்பில் 750 காவல்துறையினர் பணியில் ஈடுபட உள்ளனர் எனவும் மேலும் ஸ்டராங் ரூம் கண்கானிக்க இரண்டு குழு சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இது மட்டுமல்லாமல் துணை ராணுவ படையினர், சிறப்பு காவல் பிரிவினர் ஆகியோர் இரண்டாம்,மூன்றாம் அடுக்கு பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதனோடு வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டியவர்களுக்கான அறிவுரைகள் ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் வழங்கப்பட்டிருக்கிறது எனக் கூறிய அவர் வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும் சுமூகமான முறையில் நடப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை சார்பில் எடுத்து இருக்கிறோம் எனவும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெரும் வரை பாதுகாப்பு அளிக்க தயாராக இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.