மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாட்டில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு அமீரகம், ஜார்ஜியா, குவைத்தில் இருந்து வந்த 3 பேர் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை, சிவகங்கை உள்பட 6 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-நப்பசலையார்