கொரோனா வைரஸ் தொற்றுக்கே இவர்களை பிடித்து போய் விட்டதால்தான் அளவுக்கு அதிகமாக தொற்று பரவிக்கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் செய்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி தடுப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார்,முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் மதுரை ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ,மதுரையில் வைரஸ் தொற்று என்பது காட்டு தீயென பரவி வருகிறது இதை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை அரிய பத்திரிக்கையில் பார்த்து வருவதாக கூறினார்.
ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக விரிந்து கொண்டிருப்பதாக கூறிய செல்லூர் ராஜு, இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் இருந்தவர் ஏற்கனவே நிர்வாகத்தை தெரிந்து கொண்டவர் தான் ஆனாலும் கடந்த காலத்தில் எங்களது அரசு அமைத்த அதிகாரிகள் எல்லாம் வந்தவுடனே மாற்றிவிட்டது இதை ஒரு இழப்பை தடுப்பதற்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஆகிவிட்டது என்று குற்றச்சாட்டினார்.
மதுரையில் பல்வேறு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்ற அவசியம் தற்சமயம் இல்லை ஆனால் மாற்றியுள்ளனர் போது முதலில் தவறு இதன் மூலமாகவே வைரஸ் தொற்று அதிகமாக பரவி உள்ளது என்றும்,எங்களுக்கு ஆட்சியில் வைரஸ் தொற்றை முழுமையாக நாங்கள் கட்டுப்படுத்தி வந்தோம் ஆனால் தற்சமயம் வைரஸ் தொற்று என்பது அளவுக்கதிகமாக இருந்துவருகிறது வைரஸ் தொற்று க்கே இவர்களை பிடித்து போய் விட்டது அது தான் அளவுக்கு அதிகமாக தற்சமயம் பரவிக்கொண்டிருக்கிறது என கிண்டலாக தெரிவித்தார்.