தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில் தொழில்துறை அமைச்சர் டி.அர்.பி.ராஜா ஆய்வு மேற்கொள்ள சென்ற நிலையில், செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்காமல், அவர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் புகளூர் பகுதியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்திற்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆய்வு மேற்கொள்ள வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்தியாளர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் செய்தி சேகரிப்பதற்காக சம்பவ இடத்திற்கு தங்களது இருசக்கர மோட்டார் வாகனத்தில் விரைந்து வந்த செய்தியாளர்களை உள்ளே விடாமல், டி.என்.பி.எல் பாதுகாப்பு காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிக்க : துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி ஆலோசனை!
மாவட்ட நிர்வாகம் சார்பில் வாகனம் ஏற்பாடு செய்து தராத நிலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற செய்தியாளர்களை வெளியேவே தடுத்து நிறுத்தி, இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்து உள்ளே செல்லக்கூடாது என்றும், அவர்களை ஆக்ரோசமாக வெளியே தள்ளி பாதுகாவலர்கள் தாக்கவும் முயன்றுள்ளனர். இதனால் செய்தியாளர்களுக்கும், பாதுகாப்பு காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே திமுகவினரை மட்டும் உள்ளே அனுமதிப்பதாகவும், செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.