நில உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கி தராமல் தொடர்ந்து வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது - நீதிமன்றம் பளீச்

நில உரிமையாளர்களுக்கு வாடகை பாக்கி தராமல் தொடர்ந்து வழக்கு தொடர்வதை ஏற்க முடியாது  - நீதிமன்றம் பளீச்
Published on
Updated on
1 min read

ராயப்பேட்டை பாரத் ஸ்கேன் நிறுவனம்

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் 22 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த பாரத் ஸ்கேன் என்ற நிறுவனம், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வாடகையை செலுத்தவில்லை என நில உரிமையாளர் சஜிதா பேகம் உள்ளிட்டோர் 2018ல்  சென்னை சிறு வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிலுவை வாடகையை தர பாரத் ஸ்கேன் நிறுவனத்திற்கும், இடத்தை காலி செய்ய அனுமதி அளித்து உரிமையாளர்களுக்கும்  உத்தரவிட்டது. இந்த உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உத்தரவிட்டது.

 பாரத் ஸ்கேன் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல்

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நில உரிமையாளருக்கு வாடகை பாக்கியை தராமல் இருப்பது ஏற்க கூடியதல்ல என்றும், தற்போதைய சந்தை மதிப்பிலான வாடகையைவிட குறைவாக தருவோம் என்று மனுதாரர் தரப்பு கூறுவதில் எந்த சரியான காரணமும் இல்லை என்றும் கூறி, சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com