பெண்களுக்கான ஏராளமான திட்டங்களை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சொன்னதில் ஒன்று மட்டும் தான் செய்யாமல் இருந்தார் அதுவும் நிதி நிலை அறிக்கையில் அறிவித்துவிட்டார்.
பிறந்தநாள் விழா:
சென்னை தெற்கு மாவட்டம் திமுக சார்பில் மடிப்பாக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, முத்துசாமி, திராவிட இயக்க தமிழ் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
பெண்களே..:
இதில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் பெண்கள் அதிக அளவில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர் எனவும் தமிழ்நாட்டின் முக்கிய நகரமான சென்னை, கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் மேயராக இருப்பவர்கள் பெண்கள் எனவும் கூறிய மா. சுப்பிரமணியன் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 1920 இல் தந்தை பெரியார் கூறியதை தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 33% வழங்கினார் எனவும் அதைத்தொடர்ந்து தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார் எனவும் தெரிவித்தார்.
வாழ்த்துங்கள்:
தொடர்ந்து பேசிய அவர் பெண்களுக்கான ஏராளமான திட்டங்களை மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் சொன்னதில் ஒன்று மட்டும் தான் செய்யாமல் இருந்தார் அதுவும் நிதி நிலை அறிக்கையில் அறிவித்துவிட்டார் என்றும் பெருமிதமாக கூறினார்.
நல்ல சந்தோஷமான மனநிலையில் உள்ளவர்கள் எது சொன்னாலும் பலிக்கும் என்று கூறிய மா. சுப்பிரமணியன் பெண்களுக்கான உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இங்கு உள்ளவர்கள் வாழ்த்து கூறினால் இன்னும் நல்ல உடல்நலத்துடன் 100 ஆண்டு காலம் வாழ்வார் என்று அமைச்சர் கூறி தளபதி முதலமைச்சர் எனக் கூற பின்னால் அனைவரும் வாழ்க என வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதையும் படிக்க: 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்.... அமைச்சர் விளக்கம்...!!