மழைநீர் வடிகால் பணிகள் 97% முடிந்துள்ளது - மேயர் பிரியா தகவல்!

மழைநீர் வடிகால் பணிகள் 97% முடிந்துள்ளது - மேயர் பிரியா தகவல்!
Published on
Updated on
1 min read

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை சிங்கார சென்னை திட்டத்தில் நிதியின் 97 சதவீதம் முடிந்ததுள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில், பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதலுக்கான அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, "முதலமைச்சரின் ஆலோசனைப்படி பெருநகர சென்னை மாநகராட்சியில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். அந்த வகையில், சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இன்று அறிவியல் துறை சார்ந்த 1186 மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள், தொடர்ந்து நாளைக்கும் கணினி அறிவியல் துறை சார்ந்த 950 மாணவர்களுக்கு தனியாக நிகழ்ச்சி நடக்க உள்ளது" என தெரிவித்தார். 

மேலும், இதில் மாணவர்களுக்கு கலந்துரையாடல் மற்றும் எந்த படிப்பு படித்தால் என்னென்ன வேலைவாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம் என்றும் , அந்த மாணவர்களுக்கு இ புக் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அதன் மூலம் மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பற்றி தெரிந்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர் , சென்னை மாநகராட்சியில் புதிதாக 139 பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இடிபாடு உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த 10 வருட ஆட்சியில் சீர் செய்யப்படாமல் இருந்ததால் விரைவில் அதன் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மாநகராட்சி பள்ளிகளில் உள்ள கழிவறைகள் சரியாக இல்லை என்றால் அதனை கண்டறிந்து நிர்பயா திட்டத்தின் கீழ் அதற்கேற்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் நான் பள்ளிகளுக்கு ஆய்வுக்கு செல்லும் போதும் கழிவறை களையும் ஆய்வு செய்து தான் வருகிறேன் எனவும் தெரிவித்தார். 

மேலும், சிட்டீஸ் நிதி மூலமாக 28 பள்ளிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று. அந்த வகையில் மாணவர்கள் நிறைய சேர்ந்து கொண்டு தான் வருவதாக கூறினார். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை சிங்கார சென்னை திட்டத்தில் நிதியின் கீழ் பாகம் 1 ல் 97 சதவீதம் முடிந்துள்ளது எனவும்  இன்ப்ராஸ்டக்சரை பொறுத்தவரை 98 சதவீதம் முடிந்ததுள்ளதாகவும் கொசஸ்தலை ஆறு பெரிய திட்டம் என்பதால் 2024 ல் ஜனவரி / பிப்ரவரியில் தான் பணிகள் முடியும் எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com