செங்கல்பட்டு கோர சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு.

செங்கல்பட்டு கோர சாலை விபத்தில்  உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு.
Published on
Updated on
2 min read

செங்கல்பட்டு மாவட்டம்  கூடுவாஞ்சேரி அருகே  நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின்  குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இன்று சாலை கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்,  அதே போன்று அங்கு இருக்கும் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்ட, ஏராளமானோர் அந்த பாதையை பயன்படுத்துவது வழக்கம். இதன் காரணமாக அந்த பகுதி எப்பொழுதும், மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும்.

இன்னிலையில் இன்று அந்த வழியாக  எம்சாண்ட்  ஏற்றிக்கொண்டு வந்த லாரி, சாலையின் தடுப்பு மற்றும் சிக்னலை உடைத்து எதிர்புறம் சென்றுள்ளது. அப்போது அங்கு சாலையை கடப்பதற்காக நின்றிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதியது.

இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவர்களான  ஜஷ்வந்த், கார்த்திக் மற்றும் அதே பகுதியை சேர்ந்த  பவானி, பார்த்தசாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த ஓட்டுநர் ராஜேந்திரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, தலா 2 லட்சம் ரூபாய் மற்றும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com