இரண்டாம் கட்டமாக தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்..!!

இரண்டாம் கட்டமாக தொடங்கப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்..!!
Published on
Updated on
1 min read

முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக தஞ்சை மாநகராட்சியில் 7 மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்:

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை  செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  அதைத்தொடர்ந்து மதுரை கீழ அண்ணா தோப்பில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதலமைச்சர் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.  இதுபோல் சென்னை பெருநகர  மாநகராட்சி பள்ளிகளில் முதல் கட்டமாக 37 பள்ளிகளில் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

2ம் கட்டமாக:

அதனைத் தொடர்ந்து தஞ்சை மாநகராட்சியில் உள்ள 8 தொடக்கப் பள்ளிகளில் 374 மாணவர்களுக்கு ஏற்கனவே காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இரண்டாம் கட்டமாக 7 மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் 895 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.  இந்த திட்டத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ரவா உப்புமா, வெண்பொங்கல், அரிசி உப்புமா உள்ளிட்ட உணவுகள் காலை சிற்றுண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com