நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...!

நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு...!
Published on
Updated on
1 min read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

நான்கு நாள் பயணமாக நாகை , திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்றுள்ள முதலமைச்சர் நேற்று காலை திருக்குவளை அரசுத் தொடக்கப் பள்ளியில் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாகை ஆட்சியர் அலுவலகத்தில் அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சரின் கள ஆய்வுத் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்‌.நேரு, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், ரகுபதி, உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

நான்கு  மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள், புதிய திட்டங்களுக்கான மதிப்பீடுகள், நிலுவையில் உள்ள மத்திய மாநில அரசுத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com