உங்கள் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள்... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்... 

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்குவதை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 
உங்கள் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள்... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்... 
Published on
Updated on
1 min read

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள், நம் அனைவருடைய பொதுச்சொத்து என்றும், அவற்றில் பலவும் இந்தியாவைத் தொழில்மயமான, தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை என்றும், அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பதற்கு, மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

அதனால் அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளதாக தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், இந்தப் பணமாக்கல் என்னும் நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், தொடர்புடைய நிறுவனங்களின் பணியாளர்கள் மீதும், இந்நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் சிறு-குறு தொழில்துறை மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை என கவலை தெரிவித்துள்ளார்.

எனவே, மத்திய அரசின் பொதுச்சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும், இந்நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுடனும் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இதுபோன்ற பெரிய முடிவுகளை மத்திய அரசு எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com