ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமாா் 233 போ் உயிாிழந்துள்ள நிலையில் குடியரசு தலைவா், பிரதமா் மோடி, தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் இரங்கல் தொிவித்துள்ளனா்.
ஒடிசாவிலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில் உட்பட 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமாா் 233 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் 900-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனா். இந்நிலையில் இந்த கோர விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தொிவித்துள்ளனா்.
இதுகுறித்து குடியரசு தலைவா் திரவுபதி முா்மு, அவரது ட்விட்டா் பதிவில் ரயில் விபத்தில் பலா் உயிாிழந்ததை அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளதாககவும், உயிரிழந்த குடும்பங்களுக்கு தமது ஆறுதலை தொிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
பிரதமா் மோடி இரங்கல் தொிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ரயில்கள் விபத்துக்குள்ளானது அதிர்ச்சி அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும் தொிவித்துள்ளாா். மேலும் மீட்பு பணிகளை கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கையை துரிதமாக எடுக்கவும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவா், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாகவும் தொிவித்துள்ளாா்.
காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி அவரது ட்விட்டா் பதிவில், ரயில்கள் விபத்துக்குள்ளான சோக செய்தியறிந்து வேதனை அடைந்தாகவும், உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தொிவித்துள்ளாா். மேலும் மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் அளிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களையும், தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.
தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டா் பதிவில், ரயில்கள் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தாகவும், உடனடியாக ஒடிசா மாநில முதலமைச்சா் நவீன் பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்து குறித்துக் கேட்டறிந்தாகவும் தொிவித்துள்ளாா். மேலும் விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் இந்திய குடியரசு துணைத்தலைவா் ஜக்தீப் தன்கா், டெல்லி முதலமைச்சா் அரவிந்த் கெஜ்ரிவால், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பாஜக தலைவா் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி தேசிய தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே, கனிமொழி எம்பி உள்ளிட்டோரும் இரங்கல் தொிவித்துள்ளனா்.