சென்னை வெள்ள இடர் குழு அறிக்கை... பலன் என்ன?!!
சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது.
சென்னை வெள்ள மேலாண்மைக் குழு:
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, அதன் தலைவராக திருப்புகழ் நியமிக்கப்பட்டார். இந்த குழுவின் உறுப்பினர்களான ஜனகராஜ், அறிவுடைநம்பி, இளங்கோ, பாலாஜி நரசிம்மன், உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.
அறிக்கை:
இந்நிலையில், கடந்த ஆண்டு இந்த குழு தனது இடைக்கால அறிக்கையை சமர்பித்தது. இதன்படி தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இக்குழுவின் இறுதி அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலன்:
அதில், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையில் இருக்க வேண்டிய தொடர்புகள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், இந்த அறிக்கையில் உள்ள திட்டங்களை செயல்படுத்தினால் இதற்கான பலன்கள் அடுத்த 10 ஆண்டுகளில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பொதுத் தேர்வு எழுதாத மாணவர்கள்...!!