பருவமழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பத அளவை...ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்...!

பருவமழையால் சேதமடைந்த நெல்லின் ஈரப்பத அளவை...ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்...!
Published on
Updated on
1 min read

திருவெறும்பூர் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில்,  நெல்லின் ஈரப்பதம் அளவு குறித்து, மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

பருவம் தவறிய மழையினால் டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து சேதமடைந்தன. அத்துடன் நெற்பயிர்கள் மழையில் நனைந்ததால், நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். இதனை ஏற்று, மத்திய வேளாண் தர கட்டுப்பாட்டு குழுவினர் தமிழகத்தில் டெல்டா பகுதியில் நெல்மணிகளின் ஈரப்பத அளவை ஆய்வு செய்து வருகின்றனர்.  

அந்த வகையில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சூரியூரில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய  வேளாண் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு நெல் மாதிரிகளை எடுத்து சென்றனர். தொடர்ந்து, மணப்பாறை, மறைவானூர் ஆகிய பகுதிகளிலும் ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com