தேசிய நவீன மயமாக்கல் என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் ஆளுங்கட்சியான பாஜகவை அதாவது மத்திய அரசை கண்டித்து சதர்ன் ரயில்வே மஸ்த்தூர் யூனியன் சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது.
சதர்ன் ரயில்வே மஸ்த்தூர் யூனியன் பொதுச் செயலாளர் கண்ணையா தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எஸ் ஆர் எம் யூ துணை பொதுச்செயலாளர் பால் மாக்ஸ்வெல் ஜான்சன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது மத்திய அரசின் ஏமாற்று வேலை...
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ் ஆர் எம் யூ) பொதுச் செயலாளர் கண்ணையா இது குறித்து பேசிய போது, “மத்திய அரசின் பிரதமரும் ரயில்வே துறை அமைச்சரும் பாராளுமன்றத்தில் ரயில்வே துறை தனியார் மயம் ஆக்கப்படாது என்று கூறி வருகின்றனர். ஆனால் தனியார்மயமாக்கல் என்ற பெயரை மாற்றி விட்டு நவீன மயமாக்குதல் என்ற பெயரை வைத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்” என குற்றம் சாட்டினார்.
மேலும், “நவீன மயமாக்குதல் என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு மக்களை ஏமாற்றி வருகின்றது. 150 சுற்றுலா ரயில்களை தனியாருக்கு கொடுத்துள்ளனர். கோயம்புத்தூரில் மார்ட்டின் என்பவர் ஒரு ரயிலை எடுத்துள்ளார். இந்த ரயிலை அரசாங்கம் இயக்கினால் 28 லட்சம் ரூபாய் தான் மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும். ஆனால், தனியார் நிறுவனம் மக்களிடம் இருந்து 44 லட்சம் ரூபாய் வசூல் செய்கின்றனர்.” என கவலை தெரிவித்தார்.
மேலும் படிக்க | தேனி : அகல ரயில் பாதை பணிகள்...! போக்குவரத்து நிறுத்தம்...!
தொடர்ந்து, தேசிய மயமாக்கல் என்ற பெயரில் ரயில்வே சொத்துக்களை பாமர மக்கள், அடித்தட்டு மக்கள் நடுத்தர மக்களின் சொத்துக்களான 150 ரயில்களையும் 450 ரயில்வே நிலையங்களையும் தனியாருக்கு கொடுக்கப்படும் என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது தனக்கு கவலை அளிப்பதாகக் கூறினார்.
தனியார்மயமாக்குவது திருட்டு:
வந்தே பாரத் என்ற 200 ரயிலை தயாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதற்கு முன்பு இதே வந்தே பாரத் என்ற ரயிலை நமது ரயில்வே தொழிலாளர்கள் செய்த போது 98 கோடி ரூபாய் தான் செலவானது. ஆனால் இப்போது தனியாரிடம் அந்த பணியை கொடுத்துள்ளதால் 137 கோடி ரூபாய்க்கு ரயில்வே அமைச்சகத்திற்கு திருப்பி விற்கப் போகின்றார்கள்.
ஆனால் இந்த வண்டியை தயாரிப்பது ரயில்வே தொழிலாளர்கள் தான் தயாரிக்கின்றனர். அரசாங்கத்தின் இடமான ஐசிஎஃப் இல் இந்த ரயில் பெட்டிகளை ரயில் நிலைய தொழிலாளர்களை வைத்து தனியார் நிறுவனம் தயாரித்து ரயில்வே துறைக்கு இதை அதிக விலைக்கு விற்கின்றனர்.
98 கோடி ரூபாய் கான ரயில் பெட்டிகளை 137 கோடி ரூபாய்க்கு மீண்டும் ரயில்வே துறைக்கு விற்கப் போகின்றனர்.
சென்னை டு டெல்லி லக்னாவிற்கும் செல்லும் ரயிலில் முதலில் அரசாங்கத்திடம் இருக்கும் பொழுது, இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியில் 680 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால், தற்போது தனியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளதால் 1250 ருபாய் வசூல் செய்யப்படுகின்றது. முதல் வகுப்பு ஏசி பட்டியில் 1980 ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது தனியாரிடம் கொடுக்கப்பட்டதால் 3250 ருபாயும் வசூலிக்கப்படுகின்றது.
மேலும் படிக்க | வெற்றிகரமாக அரங்கேறிய வந்தே பாரத் 2.0 சோதனை!!!
சென்னைக்கு ஐந்து முதல் ஆறு வரையிலான வந்தே பாரத் ரயில்கள் விரைவில் வர இருக்கின்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த வந்தே பாரத் ரயில்களில் சாதாரண பொது வகுப்பு பெட்டிகளோ, ஸ்லீப்பர் வசதி கொண்ட பெட்டிகளோ கிடையாது. முழுவதும், குளிர்சாதனம் பொருத்திய ஏசி ஸ்லீப்பர் பெட்டிகள் மட்டுமே இந்த ரயிலில் இருப்பதால் பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்படும். ஆகவே, ஆரம்பத்திலேயே ஒன்றரை மடங்கு கட்டணத்தை குறைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மேலும், ரயில்வே தனியார் மையம் ஆக்குவதை கண்டித்து சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் நடத்தி வரும் போராட்டங்களுக்கு தமிழக முதல்வர் முழு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். அதேபோல், கேரள முதல்வரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். ஆகவே, மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இதற்காக போராடினால் மட்டுமே ரயில்வே துறையை தனியார் ஆக்குவதில் இருந்து தடுக்க முடியும் எனவும் கூறினார்.