எங்களுடைய கொள்கை தந்தை பெரியாருடைய கொள்கை எல்லா மக்களும் சமம் என்ற முறையிலே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கிறார் என அமைச்சர் கே,என் நேரு தெரிவித்துள்ளார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல எனவும், அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிக்க : திருப்பூர் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கைது!
அவரது கருத்துக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, தீயிட்டு கொழுத்தியவர், உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு கொடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வ உ சிதம்பர பிள்ளையின் 152 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கே.என்.நேரு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உ.பி சாமியாரால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை சீவ முடியுமா? என கேள்வியெழுப்பினார். மேலும், எங்களுடைய கொள்கை தந்தை பெரியாருடைய கொள்கை, எல்லா மக்களும் சமம் என்ற முறையிலே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்தக் கொள்கையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.