அரசு பள்ளியில் நடக்கும் பாலியல் தொல்லைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பு ஏற்க முடியுமா? எல். முருகன் கேள்வி

அரசு பள்ளியில் நடக்கும் பாலியல் தொல்லைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பு ஏற்க முடியுமா?  எல். முருகன் கேள்வி
Published on
Updated on
1 min read

அரசு பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்கிறது அதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பு ஏற்க முடியுமா என மாநில பாஜக தலைவர் எல். முருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.


பிரதமர் நரேந்திரமோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற தினம் பாஜக தேசிய தலைமை சார்பில் ஸேவா தினமாக அறிவிக்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் பாஜகவினர் நடத்தி வருகின்றனர். சென்னை அமைந்தகரையில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கொரோனா தடுப்புப் பணிகளில், திமுக அரசு தவறான நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும், ஊரடங்கு போடுகிறோம் என்று தவறான நடவடிக்கையை எடுத்து, தமிழக அரசு கொரோனாவை பரப்பியதாக குற்றம்சாட்டினார்.


 தமிழகத்திற்கு மத்திய அரசு தடுப்பூசிகளை பாரபட்சமின்றி வழங்கும் தடுப்பூசிகளை தமிழகஅரசு முறையாக பயன்படுத்துவதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.PSSB பள்ளி பாலியல் அத்துமீறல் தொடர்பாக யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றார்,

பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது என்ற எல்.முருகன், அரசு பள்ளிகளில் பாலியல் அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்கிறது அதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பு ஏற்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com