2025 - க்குள் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் -அமைச்சர்!!!!

2025 - க்குள் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத தமிழ்நாட்டை  உருவாக்க வேண்டும் -அமைச்சர்!!!!
Published on
Updated on
2 min read

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தொழிலாளர் நலத்துறை சார்பில், குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மாநில அளவிலான ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு மேடையில் பேசினார்.

குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோர் மீது கடந்த ஒரு ஆண்டில், (01/04/2022 முதல் 30/04/ 2023 வரை)
 321 குழந்தைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே நேரத்தில் 224 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு 48 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
என துறைசார்ந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் சி.வி கணேசன் மேடை பேச்சு

இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் உள்ளது.தொழில்துறையில் தமிழ்நாடு 11 வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு  முன்னேறி உள்ளது.
வேலை வாய்ப்பு அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்.தமிழ்நாட்டில் முந்தைய காலத்தில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்ததால் தான் குழந்தை தொழிலாளர் அதிகமாக இருந்தது.ஆனால் தற்போது அந்த நிலை இல்லை.ஓட்டிற்காக கொண்டு வந்த திட்டங்கள் அல்ல.சமூகத்தில் இந்த நிலையை தவிர்க்கவே கொண்டு வரப்பட்டது.


நம் நாட்டில் குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.2025 க்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக வேண்டும்.காவல்துறை மற்றும் இரயில் பாதுகாப்பு துறைக்கும் தான் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை பாதுகாக்கும் கடமை அதிகமாக உள்ளது.தொழிலாளர்களுக்கு கிடைக்க பெறும் உதவிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற எங்கள் துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறோம்.

அமைச்சர் சி வி கணேசன் செய்தியாளர் சந்திப்பின் போது...

முதலமைச்சர் தமிழகத்தில் 2025க்குள் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தற்போது குழந்தை தொழிலாளர்கள் குறைவாக தான் உள்ளனர்.

கல்வி வளர்ச்சி தமிழகத்தில் சிறப்பாக வளர்ந்து உள்ளது. மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள், புத்தகப் பைகள், மதிய உணவு, சிற்றுண்டி கொடுக்கப்பட்டு வருகிறது.காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலமாக பள்ளி மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது.

வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய குழந்தை தொழிலாளர்கள் வந்தால் கவனிக்க அனைத்து துறைகளிலும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு குழந்தை தொழிலாளர்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.வெளி மாநில தொழிலாளர்களை கண்டறிய குழு அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகம்முழுவதும் சுமார் 7.28 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவித்தார்.


தமிழகத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களின் தகவல்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என சட்டப்படி கூற முடியாது.வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கான சலுகைகளை வழங்குவதற்கும் பணி நேரங்களில் மரணம் ஏற்பட்டால் அவர்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கும் பதிவு செய்வது தேவைப்படுகிறது என கூறினார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com