கோவை, திருப்பூர் மாநகராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்...வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!

கோவை, திருப்பூர் மாநகராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்...வெளிநடப்பு செய்த அதிமுகவினர்!
Published on
Updated on
1 min read

கோவை, திருப்பூர் மாநகராட்சிகளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரை அதிமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி 2023-24 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் மாமன்ற சிறப்பு கூட்டம், கோவை மாநகரட்சி விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் வெற்றுக் காகித பட்ஜெட் எனக் கூறி கூட்டத்தொடரை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.‌

திருப்பூர் மாநகராட்சி 2023- 24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதிநிலை குழு தலைவர் கோமதி மேயர் தினேஷ்குமார் பெற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தார். இந்த பட்ஜெட்டில் ஒன்றரை கோடி பற்றாக்குறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாமானிய மக்களுக்கான பட்ஜெட்டாக மாநகராட்சி பட்ஜெட் இல்லை என குற்றம் சட்டி அதிமுக மற்றும் பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். 

அதேபோல், கரூர் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை மேயர் கவிதா கணேசன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் சுமார் 2 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் ஸ்டீபன் பாபு, ராகுல் எம்பி பதவியை பறித்ததை கண்டிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து கொண்டு மாநகராட்சி  கூட்டத்தில் கலந்து கொண்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com