காவிாி நீா் பங்கீட்டு விவகாரம் தொடா்பாக தமிழ்நாடு - கா்நாடாக அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்னை தொடா்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே டெல்லியில் கர்நாடக முதலமைச்சா் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில், தமிழ்நாட்டிற்கு 15 நாள்களுக்கு தினமும் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.