மெரினா கடற்கரையில் படகு சவாரி சேவை தொடங்கப்படும்: சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு...

சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி சேவை துவங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். 
மெரினா கடற்கரையில் படகு சவாரி சேவை  தொடங்கப்படும்: சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு...
Published on
Updated on
1 min read

சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், சென்னை மெரினா கடற்கரையில் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் என்ற நிறுவனத்தின் பங்களிப்புடன் படகுசவாரி துவங்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவைப் படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும் என்றும் ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சொகுசுக் கப்பல் மற்றும் படகு சேவை துவங்குவது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவிலும் கண்டுகளிக்கும்படி ஒளிரூட்டப்படும் எனவும் குறிப்பிட்டார். தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் சுற்றுலாத்தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com