அரசு பள்ளிகளில் இருந்து ”பயோமெட்ரிக் வருகையை “ வாபஸ் பெறும் அரசு...!காரணம் உள்ளே!

அரசு பள்ளிகளில் இருந்து ”பயோமெட்ரிக் வருகையை “ வாபஸ் பெறும் அரசு...!காரணம் உள்ளே!
Published on
Updated on
1 min read

மகளிருக்கு 1,000 ரூபாய் வழங்கும் பணிகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் தேவைப்படுவதால், அரசு பள்ளிகளிடம் இருந்து அவற்றை திரும்பப்பெறும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை பதிவில் முறைகேடுகளை தடுக்க, பயோமெட்ரிக் வருகை பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக, 2020 மார்ச் மாதத்திற்கு பின், பயோமெட்ரிக் முறை கைவிடப்பட்டது.

இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது அவர்களின் அனுமதி பெற்ற பள்ளி அலுவலர்கள், மொபைல் போன் செயலி வழியாக, தினசரி வருகையை பதிவு செய்கின்றனர். இதில், பணிக்கே வராமல் பல ஆசிரியர்களுக்கும் செயலியில் வருகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த குளறுபடியை தடுப்பதற்கு மீண்டும் பயோமெட்ரிக் வருகை பதிவு முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், மகளிருக்கு 1,000 ரூபாய் வழங்கும் பணிகளுக்கு பயோமெட்ரிக் கருவிகள் தேவைப்படுவதால், அரசு பள்ளிகளிடம் இருந்து அவற்றை திரும்பப்பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு பயோமெட்ரிக் கருவிகளை திரும்ப பெறுவதால் ஆசிரியர்களுக்கு தான் மகிழ்ச்சி என்றே கூறலாம்...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com