"மிகப்பெரிய மோசமான எதிரி என்றால் ஜெயலலிதா....!"

"மிகப்பெரிய மோசமான எதிரி என்றால் ஜெயலலிதா....!"
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், காந்திசாலையில் பெரியார் தூண் அருகில் நடைபெற்றது.  மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான க.சுந்தர் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற  உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி உடன் இருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் போது கண் சிகிச்சை முகாமில் கண்ணாடி வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கண்ணாடிகளை வழங்கி டி.ஆர்.பாலு பேசுகையில், 

"மிகப்பெரிய மோசமான எதிரி என்றால் ஜெயலலிதா, அவர்களை எதிர்க்க வேண்டும் என்றால் மிகப்பெரிய மோசமான திட்டங்களை வகுத்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என கூறினார். மேலும், திராவிடமாடலில் தொண்டர்களுக்கு முதல் முகம் போர்முகம் என்றும்,  எதிரிகளை எதிரிகளாகவே பார்க்கவேண்டும்; நண்பர்களாக பார்க்ககூடாது எனவும், அப்படி பார்த்தால் ரகசியங்கள் எல்லாம் எதிரிகளுக்கு போய்விடும் எனவும் கூறினார். 

அதையடுத்து, , அம்மா உணவகத்தை அண்ணா உணவகமாக மாற்றவேண்டுமென முதலமைச்சரிடம் தான் கோரிக்கை வைத்தபொழுது முதலமைச்சர் காழ்ப்புணர்ச்சி அரசியல் வேண்டாம் என்று கூறினார் என்றும், அதற்கு தான் "எனினும், அவர்கள் காழ்புணர்ச்சியுடன் தானே பீச்சில் இடம்தரவில்லை..?" என்று கூறியதாகவும், ஆனால் அவர் , " காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்படுவோம்", எனக்கூறி, அம்மா உணவகம் என்றே இருக்கட்டும் என முதல்வர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டிப்  பேசினார்.

மேலும், அரசியலில் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் தான் வந்த வேலையை விட்டுவிட்டு சண்டிக்குதிரை போல செயல்படுகிறார் ஆளுநர் என விமர்சித்துள்ளார். அதாவது, "ஆளுநர் வேலை என்பது உறுதிமொழி ஏற்பது, அமைச்சரவை சொல்வதைச் செய்வது, பின்னர், அமைச்சரவையில் ஒப்புதலோடு செய்த சட்டமசோதாகளை ஒன்று குடியரசுதலைவருக்கு அனுப்பவேண்டும்; அல்லது நிராகரிக்கவேண்டும்  எனவும், இதையெல்லாம் செய்யாமல் உலகில் பெரிய அரசியல்வாதியை போல ஆளுநர் சண்டிகுதிரை போல் தான் எதற்கு வந்தோம் என்று தெரியாமல் திராவிடமாடல் காலாவதி ஆகிவிட்டது என்று கூறுகிறார்',  என விமர்சித்தார். ஆளுநரின் சனாதன கொள்கை தான் காலாவதி ஆகி அலுத்து, புழுத்துப்போய்விட்டது என சாடினார். 

இக்கூட்டத்தில் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்கேபிசீனிவாசன், மாநகராட்சி மூன்றாவது பகுதி செயலாளர் தசரதன் உட்பட கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com