ஓசூரில் தடை செய்யப்பட்ட ஹார்ன்கள் பறிமுதல்..!

Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை  வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ஓசூர் மாநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி மற்றும் போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான அதிகாரிகள், அதிரடியாக பேருந்து நிலையத்தில் நுழைந்து அங்கிருந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சுமார் 50 -க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், 31 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய தடை செய்யப்பட்டுள்ள காற்று ஒலிப்பான்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, மீண்டும் இது போன்று காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்பட்டால் அபராதம் விதித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com