மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையை கடந்த பின் அதன் தாக்கமாக வேலூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து வருகிறது. மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதி மலை அடிவாரத்தில் அதிக அளவு மழை பெய்து வருவதால் மலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிங்கிரி கோவில் நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வாழை மரங்கள் சாய்ந்தது - விவசாயிகள் சோகம்
சிங்கரி கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் தேக்கம் முழையாக நிறைந்து மழைநீர் ஆனது வழிந்து ஓடுகிறது. இதன ஆற்றில் வெள்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதான் காரணமாக ஆற்றோரம் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் அந்த பகுதியில், அதிக காற்றின் காரணமாக வழை மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சிங்கரி கோயில், கத்தாழம்பட்டு, கிழ் அரசம்பட்டு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழையை அதிகளவில் பயிரிட்டு வருகிறனர். இந்த நிலையில், மாண்டஸ் புயலின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள், சிறிய கன்றுகள் காற்றினால் சாய்ந்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.