சுற்றுலா பயணிககளை கவர்ந்திழுக்கும் மூங்கில் யானைகள்!!

சுற்றுலா பயணிககளை கவர்ந்திழுக்கும் மூங்கில் யானைகள்!!
Published on
Updated on
1 min read

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள மூங்கில் யானை சிலைகளை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு சிற்பத்தில் உள்ள யானை கற்சிற்பத்தை நினைவு படுத்தும் வகையில் கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியில் மூங்கில்களால் தயாரித்து, வடிவமைக்கப்பட்ட 15 யானை சிலைகள் லாரி மூலம் கேரளாவில் இருந்து மாமல்லபுரம் கொண்டு வரப்பட்டது. 

அந்த யானை சிலைகள் தற்போது கடற்கரைகோவில்  வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. குட்டி யானை முதல் பெரிய யானை வரை நிஜ யானைகள் கூட்டம், கூட்டமாக புல்வெளியில் மேய்வது போன்று தத்ரூபமாக ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் எப்போதும் சுற்றுலா பயணிகள் நிறைந்த காணப்படும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் அசல் யானை போல் உள்ள மூங்கில் யானை சிலைகளின் அருகில் வந்து அதன் அழகை ரசித்து பார்த்து அவற்றின் முன்பு நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். வெளிநாட்டு பயணிகள் பலர் அசல் யானையே என்று அதன் அருகில் வந்து பார்த்து ஏமாந்து சென்றதும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com