கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு... பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி... 

திருவாடானையில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தணிக்கும் துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு... பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி... 
Published on
Updated on
1 min read

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வருவாய்,பேரிடர் மேலாண்மை மற்றும் துயர் தணிக்கும் துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாடானை வட்டாட்சியர் செந்தில் வேல்முருகன் தலைமையிலும், திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் புயல்-வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற நேரங்களிலும், நிலநடுக்கம், தீ விபத்து ஆகிய கால கட்டங்களிலும் பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்வது பற்றியும், பேரிடர்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு முதலுதவி செய்து அவர்களை மீட்பது பற்றியும், கட்டிட இடிபாடுகள் மற்றும் தீ விபத்தில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை மீட்பது பற்றியும் தீயணைப்புத் துறையினர் டெமோ என்னும் ஒத்திகை செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விளக்கிக் கூறினர்.

மேலும் இந்த ஒத்திகை நிகழ்வில் திருவாடானை வருவாய்த்துறையினர், காவல்துறையினர், அரசு கலைக் கல்லூரி முதல்வர் மற்றும் விரிவுரையாளர்கள் உட்பட ஏராளமான மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com