எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரா?!!

புதிய ரயில் திட்டங்கள் செயல்படுத்துவது தொடர்பாக எம்.பி.க்களுடன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரா?!!
Published on
Updated on
1 min read

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தில் புதிய திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான ஆரோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலுள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெற்றது. 

கலந்துகொண்டோர்:

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ரயில்வே உயரதிகாரிகள் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் , கலாநிதி வீராசாமி கதிர் ஆனந்த், கனிமொழி சொமு, ரவிக்குமார், விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திட்டங்கள்:

சென்னை சென்ட்ரல் , தாம்பரம் , ஆவடி ஆகிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான தொழில் நுட்ப சாத்தியக் கூறு ஆய்வு நடைபெற்று வரும் நிலையில் அது தொடர்பாகவும்,  சென்னை கோட்டத்தில் 18 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவது குறித்தும் பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு  அறிவிக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 314 கோடி நிதியின் மூலம் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிய ரயில் வழித்தடங்களை ஏற்படுத்துவது, அகல ரயில் பாதைகளும் இரட்டை ரயில் பாதைகளும் அமைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கைகள்:

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது , தொலைதூர ரயில்களை முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்துவதற்கு அனுமதி பெறுதல் , ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க மேற்கோள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் பெயர்:

புதிய ரயில் வழித்தடங்களை ஏற்படுத்துவது , இரட்டை மற்றும் அகல ரயில் பாதைகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.  இக்கூட்டத்தில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க எம்.பி. தயாநிதி மாறான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com