ஜல்லிக்கட்டு அரசானையை மஞ்சுவிரட்டு என மாற்றி அரசே விழாவை ஏற்று நடத்த வேண்டும் என 24 அரை கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உலகப்புகழ் பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு மாசி மகத்தன்று நடைபெறும் பாரம்பரியமிக்க இந்த மஞ்சுவிரட்டு 1000 ஆயிரம் வருடங்கள் பழமையானதாகும். இந்த மஞ்சுவிரட்டு தடை காலத்திலேயே தமிழக அரசின் அரசானையுடன் நடைபெறும் விழாவாகும். இந்த மஞ்சுவிரட்டு காண லட்சக்கணக்கான பெண்கள் வருகைபுரிவார்கள். இங்கு பாதுகாப்பாக பாறையில் அமர்ந்து பார்க்ககூடிய வகையில் இயற்கையாகவே அமைந்துள்ளது.
திங்கட்கிழமை காலை 11 மணிக்கு மேல் நடைபெறும் இந்த மஞ்சுவிரட்டுக்காக விஐபி கேலரி, கால்நடை பரிசோதனை மையம், மருத்துவகுழுவிற்கான மையம் என அரசு வழிகாட்டுதலுடன் அமைக்கப்பட்டு வருகிறது.இந்த மஞ்சுவிரட்டை காண சுற்று வட்டார பகுதியிலிருந்து ஆண்கள் பெண்கள் என லட்சக்கணக்கான பார்வையாளர்களும் வரவுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளை அரசின் பார்வையில் ஐந்து நிலை நாட்டார்கள் மிகத் தீவிரமாக செய்துவருகிறார்கள். முன்னேற்பாடு பணிகளை சிங்கம்புணரி தாசில்தார் சாந்தி, துணை தாசில்தார் சிவராமன், கால்நடை மருத்துவ குழுவினர் காவல்துறையினர் இடத்தை பார்வையிட்டு செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டை ஜல்லிக்கட்டு என வெளியிட்டுள்ளதாகவும் அரசானையை மஞ்சுவிரட்டு என மாற்றி வரும் காலங்களில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டை போல அரசே ஏற்று நடத்தவேண்டும் என ஐந்துநிலை நாட்டார்கள் சார்பில் 24 அரை கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.