போக்குவரத்து கழகங்களுக்கு தற்சார்பு இயக்குநர்கள் நியமனம்!

போக்குவரத்து கழகங்களுக்கு தற்சார்பு இயக்குநர்கள் நியமனம்!
Published on
Updated on
1 min read

போக்குவரத்துக் கழகங்களுக்கான தற்சார்பு இயக்குநர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
 
கம்பெனி சட்டப்படி, போக்குவரத்துக் கழகங்களுக்கான தற்சார்பு இயக்குநர்கள் மற்றும் பெண் இயக்குநர்களை நியமிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சென்னை மாநகரம், சேலம், கோவை போக்குவரத்துக் கழகங்களுக்கு சர்வதேச பொது போக்குவரத்து நிபுணர் வளவன் அமுதன் தற்சார்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

விரைவு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகோணம், திருநெல்வேலி ஆகிய போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்டயக் கணக்காளர் ராஜேஷ், மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு பட்டயக் கணக்காளர் ரமேஷ்பாபு, போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்துக்கு பட்டயக் கணக்காளர் ஏ.கே.வேணுகோபால் ஆகியோர் தற்சார்பு இயக்குநர்களாக நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதே போல், சென்னை மாநகரம், விழுப்புரம், திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்டயக் கணக்காளர் அனுஷா சீனிவாசன், விரைவு, சேலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு பட்டயக் கணக்காளர் பிரியா வேணுகோபால், கோவை போக்குவரத்துக் கழகத்துக்கு டி.சரஸ்வதி, கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்துக்கு பட்டயக் கணக்காளர் கவிதா குலாச்சா, மதுரை போக்குவரத்துக் கழகத்துக்கு பட்டயக் கணக்காளர் ஏ.பத்மா, போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்துக்கு பட்டயக் கணக்காளர் ஜி.கீதா ஆகியோர் தற்சார்பு பெண் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் எனவும், போக்குவரத்துக் கழகங்களின் திட்டம், நிதி தொடர்பான முன்மொழிவுகளை தற்சார்பு இயக்குநர்களின் அனுமதி பெற்ற பிறகே வாரிய கூட்டத்தில் முன்வைத்து ஒப்புதல் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com