மகளிர் உரிமை தொகை; 18 முதல் விண்ணப்பிக்கலாம்!

Published on
Updated on
1 min read

மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இ சேவை மையங்கள் மூலம்  நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பேரறிஞர் அண்ணாவின் 115 வது பிறந்தநாளான நேற்று முதலமைச்சர் தலைமையில் தொடங்கப்பட்டது. ஆனால் நேற்றைய முன்தினமே, சில பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அதேசமயம், நிறைய பயனாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ சேவை மையங்கள் மூலம் நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தகுதியான ஆவணங்கள் மற்றும் தகுதியான மகளிருக்கு கட்டாயம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் நாளை மறுநாள் முதல் குறுஞ்செய்தியாக 56.6 லட்சம் மகளிருக்கு அனுப்பப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுதியான மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 56 லட்சத்து 60 ஆயிரம் மகளிருக்கு நிராகரிக்கப்பட்ட காரணங்கள் நாளை மறுநாள் முதல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் அறிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com