ஈரோட்டில் நடந்த பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பங்கேற்ற மாநில தலைவர் அண்ணாமலை, செந்தில்பாலாஜி போன்ற ஊழல்வாதிகள் கைதானதும், முதல்வரும், அவரது மகனும் ஓடிச்சென்று காப்பாற்ற முயல்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் நடந்த பாஜக 9 வது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பங்கேற்ற மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது, மத்தியில் கடந்த 2014ம் ஆண்டு 283 எம்.பி.,க்களுடன் பிரதமளர் மோடி தலைமையில் அமைந்த ஆட்சி, 2019ம் ஆண்டில் 303 எம்.பி.,க்களுடன் முழு பலத்துடன் தொடர்கிறது. கடந்த 9 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் இந்தியா கடும் வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோல வரும் 2024ம் ஆண்டிலும் 400க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களுடன் பிரதமராக மோடி தலைமையில் ஆட்சி அமையும், என பேசியுள்ளார்.
இச்சூழலில், இந்தியாவில் பிரிவை ஏற்படுத்தும்படி பாட்னாவில் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி, ஆட்சிக்கு வர திட்டம் வகுக்கின்றனர். செந்தில்பாலாஜி போன்ற ஊழல்வாதிகள் கைதானதும், முதல்வரும், அவரது மகனும் ஓடிச்சென்று காப்பாற்ற முயல்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சூழலில், இந்தியாவில் பிரிவை ஏற்படுத்தும்படி பாட்னாவில் எதிர் கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி, ஆட்சிக்கு வர திட்டம் வகுக்கின்றனர். செந்தில்பாலாஜி போன்ற ஊழல்வாதிகள் கைதானதும், முதல்வரும், அவரது மகனும் ஓடிச்சென்று காப்பாற்ற முயல்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், செந்தில்பாலாஜியை நேரில் சென்று பார்க்காத ஒரே அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் மட்டுமே உள்ளார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவரது அமைச்சரவையில் குற்றவழக்கில் சிக்கிய ஆலடி அருணா, என்.கே.கே.பி.ராஜா போன்றோரை உடனடியாக பதவியில் இருந்து நீக்கினார், எனவும் பேசியுள்ளார்.
ஆனால், ஸ்டாலின் அதை மறந்து, செந்தில்பாலாஜி இருந்தால்தான் வரும் எம்.பி தேர்தலில் 234 தொகுதியிலும் வாக்காளர்களுக்காக பட்டி போட முடியும் என திட்டமிடுகிறார், என சாடியுள்ளார்.
மேலும், செந்தில்பாலாஜியால் ஆண்டுக்கு 44,000 கோடி ரூபாய் நேரடியாகவும் 60,000 கோடி ரூபாய் மறைமுகமாகவும் வருவாய் கிடைத்தது. அதை இழக்க விரும்பாத ஸ்டாலின், அவரை காப்பாற்றுவதற்காக, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர கவர்னருக்கு கடிதம் அனுப்புகிறார், என குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அமைச்சரவையில் சிவசங்கர், பொன்முடி, நேரு, சேகர்பாபு, மகேஷ் என ஊழல்வாதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அவை விரைவில் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க || அரசு அதிகாரியை தாக்கிய திமுக நிர்வாகிகள்!