"காமராஜர் ஆட்சியை பாமக தான் கொண்டு வரும்" அன்புமணி ராமதாஸ் பேச்சு!

"காமராஜர் ஆட்சியை பாமக தான் கொண்டு வரும்" அன்புமணி ராமதாஸ் பேச்சு!
Published on
Updated on
1 min read

சென்னையில் நடந்த விழாவில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் பாஜக நடத்தும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பாமகவிற்கு அழைப்பு வந்து உள்ளது. எனவே அந்த கூட்டத்தில் பாமக கண்டிப்பாக கலந்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில், பெருந்தலைவர் காமராஜர், குமரி தந்தை மார்ஷல் நேசமணி, மா.பொ.சிவஞானகிராமணி ஆகியோர் பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, நினைவுப் பரிசு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். 

தொடா்ந்து அவா் செய்தியாளா்களை சந்தித்து பேசுகையில், மேகதாதுவில் அணை கட்டுவது, சட்டத்துக்கும், நீதிக்கும் எதிரானது என தொிவித்த அவா் தமிழ்நாடு அனுமதி இல்லாமல் காவேரியில் எந்தவித கட்டுமானமும் செய்ய முடியாது என்பது சட்டம். அதை மீறி அரசியலுக்காக கர்நாடக அரசு இதனை செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், டெல்லியில் பாஜக நடத்தும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பாமகவிற்கு அழைப்பு வந்து உள்ளது. எனவே அந்த கூட்டத்தில் பாமக கண்டிப்பாக கலந்து கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவா், திமுக அரசு மதுவிலக்கு கொள்கையை அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தொடா்ந்து பேசிய அன்புமணி, கர்மவீரர் காமராஜர் கனவை நினைவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி பேசுவதில்லை. பாமக தான் பேசுகிறது எனக்கூறிய அவா், காமராஜர் ஆட்சியை கொண்டு வர கூடிய முழு தகுதி கொண்ட கட்சி பாமக தான், என்றும் கூறியுள்ளார். 

மேலும் நீர் மேலாண்மை, நீர் பாசனம், தொழிற்சாலை, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம், கல்வி உள்பட காமராஜர் திட்டங்களை, தமிழ்நாட்டில் பாமகவிற்கு ஆட்சி அதிகாரத்தை தந்தால் கொண்டு வருவோம் என்றும் பேசியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com