கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் பாகோடு தேனாம்பாறை பகுதியை சேர்ந்த பெறில் ஹெர்மன் பியான்ஷா தம்பதிகளின் 11 மாத குழந்தை அற்றி ஹெர்மன் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பெயரை பெற்றோர்கள் கூற 233 பொருட்களை சரியாக இனம் கண்டு எடுத்து அகில உலக அளவில் சாதனை படைத்தார்.
இவரது பெயர் வேல்டு ரெக்கார்ட் புக் ஆப் லண்டன் , இண்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட் ஜாக்கி புக் ஆப் வேல்டு ரெக்கார்ட், கலாம் வேல்டு ரெக்காட்ஸ், மேஜிக் புக்காப் ரெக்கார்ட்ஸ் என பல சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.
இந்த சுட்டி குழந்தையின் பெயர் இது போன்று இவரது சாதனையை பாராட்டி கடந்த 15 தேதி சென்னையில் கலாம் விருது கிடைத்துள்ளது. குழந்தையின் பெற்றோர்கள்தான் இந்த குழந்தையின் பயிற்சியாளராக இருந்துள்ளனர்.
இந்த குழந்தையின் தந்தை கேரள மாநிலம் எர்ணாகுளம் அப்பல்லோ டயர்சில் வேலைபார்த்து வருகின்றனர். அடுத்ததாக 195 நாடுகளின் கொடியை காட்டினால் எந்த நாட்டின் கொடி என சொல்ல பயிற்சி நடந்து வருகிறது.