கூட்டணி வேறு - கொள்கை வேறு - இபிஎஸ்

கூட்டணி வேறு -  கொள்கை வேறு - இபிஎஸ்
Published on
Updated on
1 min read

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.இதில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றனார்;


பின்னர் மேடையில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ;

ரமலான் நோம்பு மேற்கொண்டுள்ள அனைவருக்கும் என் அன்பை தெரிவித்து, சிறுபான்மை மக்களின் அரணாக அதிமுக என்றும் விளங்கும் என்பதை தெரிவித்துக் கொண்டார் மேலும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள், அதேபோல எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா வழியில் சிறுபான்மை மக்களை எவ்வித சமரசங்களுக்கும் இடமின்றி பாதுகாத்து வந்துள்ளனர். அதே வழியில் எப்போதும் செயல்படுவோம் என்றும் கூறினார்

ஒரு சில கட்சிகளைப் போல சிறுபான்மை மக்களை ஓட்டுக்காக பயன்படுத்தும் கட்சி அதிமுக இல்லை. சிறுபான்மை மக்களின் உணர்வோடு ஒன்றி பிணைந்தது அதிமுக. கொள்கை வேறு கூட்டணி என்பது வேறு கொள்கை,  இன்சியல் போன்றது கொள்கை அதை யாராலும் மாற்ற முடியாது என்றும் அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கூட்டணியை அமைப்போம். ஆனால் கொள்கை வேறு என்ற தெளிவு எப்போதும் எங்களுக்கு உண்டு என்று பேசினார்.

அன்பின் முக்கியத்துவத்தை நபிகள் வாழ்க்கை எவ்வாறாக எடுத்து சொல்லியது, என்பதை குட்டி கதையை அவர் சொன்னார். விழாவில் அதிமுகவின், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com