திமுகவை வீழ்த்த அதிமுக ஒருங்கிணைய வேண்டும்...விரைவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் யை சந்திப்பேன்!

திமுகவை வீழ்த்த அதிமுக ஒருங்கிணைய வேண்டும்...விரைவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் யை சந்திப்பேன்!
Published on
Updated on
1 min read

நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை எதிர்கொள்ள அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்றும், இதற்காக விரைவில் இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்திக்க திட்டமிட்டு உள்ளதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

மரியாதை செலுத்திய சசிகலா :

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106  ஆவது பிறந்த நாளை யொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு சசிகலா  மலர் தூவி மரியாதை செலுத்தி, தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார்.

சசிகலா பேட்டி :

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலாவிடம், ஆளுநர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதே ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டவுடன் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும். அதில் திருத்தம் இருந்தால் அவர்களே செய்து அனுப்புவார்கள். அதன் பின்பு இரண்டாவது முறையும் அனுப்ப வேண்டும், அதை பார்த்த பிறகு தான் புத்தகமாக அச்சிடப்படும்.

கருத்து சொல்ல ஏதுமில்லை :

ஆனால், தற்போதைய அரசு ஆளுநர் உரையை மாளிகைக்கு எத்தனை முறை அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. ஆகவே இது குறித்து கருத்து சொல்வதற்கு ஏதுமில்லை என்றும், ஆளுநரை எப்படி நடத்த வேண்டும் என்று அணுகுமுறை உள்ளது, அதைப்போல் தமிழ்நாடு ஆளுநரை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும் என்றும், தங்களை விளம்பரப்படுத்தி கொள்ளவதிலேயே திமுக தீவிரமாக உள்ளது என்றும் சசிகலா குற்றம்சாட்டினார்.

விரைவில் சந்திப்பேன் :

தொடர்ந்து பேசிய அவர், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுக ஒருங்கிணைய வேண்டும், இதற்காக ஓ.பி. எஸ் மற்றும் இ. பி. எஸ் ஆகியோரை விரைவில் சந்திக்கும் திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com