”அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களுக்கு பணம் ஒதுக்கவில்லை” - அமைச்சர் கே.என்.நேரு.

”அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்களுக்கு பணம் ஒதுக்கவில்லை”  - அமைச்சர்  கே.என்.நேரு.
Published on
Updated on
1 min read

சேலம் மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற 55 பணியாளர்களுக்கு மூன்று கோடியே 33 லட்சம் மதிப்பிலான பணபயன்களுக்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். இதை தொடர்ந்து அமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது,

"கடந்த பத்து ஆண்டுகளில் எந்தவித திட்டங்களும் இல்லாமல், நிறைய திட்டங்களுக்கு பணம் ஒதுக்காமலும், அனுமதி பெறாமல் இருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிமுக ஆட்சியில் விட்டு சென்ற பணிகளை முடிப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதிஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்கள், மேலும் நிறைய பணிகளுக்கு நாம்  நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது" என்றும் பேசினார்.

அதைத்தொடர்ந்து,  "அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒழுங்காக வரிவசூல் செய்யாமல் முழுக்கமுழுக்க எந்த பணியும் செய்யாமல் அரசின் பணத்தை வைத்து சம்பளம் கொடுக்கப்பட்டு வந்த நிலை மாறி, ஒழுங்கு முறையில் கொண்டுவர வேண்டி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தங்களது பணியாளர்களுக்கு தானே சம்பளம் கொடுக்கும் அளவிற்கு தன்னிறைவு பெற்ற மாநகராட்சிகளாக,பேரூராட்சிகளாக, நகராட்சிகளாக செயல்பட்ட துவங்கி உள்ளது", எனவும் தெரிவித்தார் .

மேலும் ஊழியர்கள் ஓய்வுபெறும் காலத்தில் பணபலன்கள் அரசிடம் கிடைக்கும்,மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் ஒழுங்காக செய்ய வேண்டும், அனைத்து பணியாளர்களுக்கும்,அனைத்து காலங்களிலும் கிடைக்க வேண்டிய தொகை கிடைக்கும், நீங்கள் இதில் சுணக்கம் காட்டினால் பல பணியாளர்கள் பாதிக்கப்படுபவர்கள் எனவும் பேசினார்.பணியில் இருந்தபோது மறைந்த ஊழியர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com