வாகன ஓட்டுநர்களுக்கு தங்கும் விடுதி: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!

வாகன ஓட்டுநர்களுக்கு தங்கும் விடுதி:  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!
Published on
Updated on
1 min read

பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சரியான தூக்கமின்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி ஓட்டுநர்களுக்கும் விடுதிகளிலேயே தங்க அறை ஒதுக்க வேண்டும் என வீட்டுவசதித்துறை செயலாளருக்கு  தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் , இறையன்புவின் கடிதத்தை தொடர்ந்து தமிழக அரசின் வீட்டுவசதித்துறை சார்பாக ஓட்டுநர்களுக்கு அறை ஒதுக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. 

அதன்படி, ஓட்டுனர்களுக்கு, குளியலறை, கழிப்பறை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய அறையை ஒதுக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 

அதோடு, இந்த அறை விடுதி, விடுதி வளாகம் அல்லது விடுதியிலிருந்து 250 மீட்டர் தொலைவுக்குள்ளாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com