பீகார் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழு சென்னை வருகை...!!

பீகார் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழு சென்னை வருகை...!!
Published on
Updated on
1 min read

வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வளைதளங்களில் வீடியோ பரவி வரும் நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன், அமைச்சர் சி.வி.கணேசன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வடமாநிலத்தவர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.  தமிழ்நாட்டில் சில இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வளைதளங்களில் வீடியோக்கள் பரப்பட்டு வருகிறது.

இதையடுத்து, பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சார்ந்த 8 பேர் கொண்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட குழு இன்று மாலை சென்னை வருகின்றனர்.  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை ஆணையரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.  வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக வளைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com