வங்க கடலில் உருவாகும் புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும் - தென் மண்டல தலைவர் பாலசந்திரன்!

Published on
Updated on
1 min read

வங்கக்கடலில் டிசம்பர் 3-ம் தேதி உருவாகும் புயல் வடதமிழ்நாட்டை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை  நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல தலைவர் பாலசந்திரன், வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவித்தார்.

வங்கக்கடலில் டிசம்பர் 3-ம் தேதி உருவாகும் புயல் 4 ஆம் தேதி வட தமிழகம் - ஆந்திரா இடையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4 ஆம் தேதி அதிகாலை புயலாகவே கரையை கடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com