தொண்டு நிறுவனங்களில் உதவியுடன் வேளாண் இணை இயக்குனர் ஆணைப்படி அம்மனூர், கச்சனம் .விளத்தூர். கோமல்.ஆதனூர், திருவலஞ்சுழி. ஆண்டாங்கரை.குறும்பல். கட்டிமேடு. ஆதிரங்கம் சேகல். மேலமருதூர் எழிலூர், கொருக்கை விளக்குடி, காடுவா கொத்தமங்கலம் முதலிய கிராமங்களில் ஒரு கிராமத்துக்கு 100 கிலோ அரிசி குருணை ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ எலி மருந்து ஆகியவற்றை கலந்து ஐந்து கிராம் அளவுள்ள சிறு பொட்டலமாக மடித்து எலிகள் நடமாட்டம் உள்ள வயல் வரப்புகளில் இடுவதன் மூலம் எலிகளுக்கு விஷ உணவவிட்டு எளிதாக ஒட்டுமொத்தமாக எலிகளை ஒழிக்க திட்டமிடப்பட்டது. 1500 கிலோ அரிசி குருணை 15 லிட்டர் தேங்காய் எண்ணெய் 15 கிலோ புரோமோடையலான் எலி மருந்து கலந்த மூன்று லட்சம்விஷ உணவு பொட்டலங்கள் அனைத்து ஊராட்சிகளில் தயாரிக்கப்பட்டு அனைத்து கிராமங்களின் வயல்களிலும் விடப்பட்டது.