காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில், ஒரு நாள் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் மே 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதையும் படிக்க : மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?
இந்நிலையில் தற்போது, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு நாள் கால தாமதமாக மே 8-ம் தேதி உருவாகும் எனவும், இது மே 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.