நீண்டகால ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில், இன்று சேலம் மத்திய சிறை முன்பு சிறை நிரப்பும் போராட்டம் நடைப்பெற்றது.
அரசியல் சாசன சட்டம் தந்துள்ள 161-வது பிரிவை பயன்படுத்தி தமிழக சட்டமன்றத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை இதில் முன்வைக்கப்பட்டது. மேலும் இச்சிக்கல் தீரும்வரை சம்மந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு நீண்ட சிறைவிடுப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், வழக்கு, சாதி மற்றும் மதத்தின் பெயரால் இதில் பாராபட்சம் காட்டப்படக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசு சிலரது முன் விடுதலையை மதத்தை காரணம் காட்டி, உண்மைக்கு மாறான கருத்துகளை உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் கேப்டன் செய்யது முகம்மது பாருக் தலைமையில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தை இணை பொதுச்செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயீ உரையாற்றி தொடங்கி வைத்தார். துணைப்பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்.
தொடர்ந்து, மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி, தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தோழர். தியாகு ஆகியோர் கோரிக்கை உரையாற்றினர். சிலர் கோபத்தில் ஆதிநாதன் ஆணையம் பெயரிட்ட பதாகையை எரித்தனர். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் மதியம் 4 மணி முதல் குழுமத் தொடங்கினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்துகள், வேன்கள், கார்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்தவர்கள் போராட்ட களத்தில் கோரிக்கை முழக்கங்களை எழுப்பியப்படி அணிவகுத்தனர்.
போராட்டப் பகுதியை சுற்றிலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடிகள் கட்டப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக திரண்டதால் அப்பகுதியில் உள்ள சாலைகள் நெரிசலால் திணறியது. மக்கள் எழுச்சியோடு தடையை மீறி திரண்டு கோஷங்களை முழங்கினர். கைதான தருணத்தில் உணர்வாளர்கள் சாலையை மறித்து அமர்ந்து முழங்கினர். பிறகு கொந்தளிப்புகளுடன் கைதுகள் நடைபெற்றது. இக்களத்தில் சேலம் மாவட்ட செயலாளர் சாதிக், மாவட்ட பொருளாளர் A.அஸ்லம் கான், மாவட்ட துணைச் செயலாளர்கள் தௌலத் பாஷா, அம்ஜத், ஆகியோர் கைது களத்தை ஒழுங்குப்படுத்தினர்.
இக்கோரிக்கைக்கு ஆதரவாக மதிமுக சார்பாக மாநில அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஆ. அனந்தராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சேலம் மாவட்ட செயலாளர் மோகன், immk சார்பாக மாநில பொருளாளர் திருப்பூர் ஹாலிதீன், மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் சார்பாக இப்ராஹிம் பாதுஷா, SDPI சார்பாக மாவட்ட தலைவர் D.ஷெரிப் பாஷா, INTJ சார்பாக மண்டல செயலாளர் ஆனைமலை ஆசிப், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக செந்தில் குமார், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் M.அப்துல் ரஷீத், மே-17 இயக்கம் சார்பாக தோழர் சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர் மக்கள் சேவகர் அமைப்பின் சார்பாக R. சங்கர் கணேஷ், IMMK மாவட்ட தலைவர் S.நிசார், ம.ஜ.மு.க மாவட்ட செயலாளர் I.குலாப்ஜான், நாயக் முத்தவல்லி N.காதர் உசேன் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் சேலம் மாவட்ட நிர்வாகிகள் சதாம் உசேன், முஸ்தபா, காதர் உசேன், ஜபீர், முபாரக், செய்யது முஸ்தபா, அஸ்லம் கான், மஹபூப் அலி, நாகராஜ், அனீஸ் முபாரக், அசாசுதின், காதர் செரிப், ஜான்பாஷா, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.