திருச்சி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 9 விடுதிகள் கட்டப்படும் - அமைச்சர் கயல்விழி

Published on
Updated on
1 min read

ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் பொழுது மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்வழி தெரிவித்துள்ளார்.

ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்யவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்ற அவர், ஆதி திராவிடர் நலத் துறையின் விடுதிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் திருச்சி, கோவை, நீலகிரி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் 9 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கும் பொழுது மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com