நாங்குனேரியில் மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவத்தில் திமுக செயலாளர் உறவினர் உட்பட 6 பேர் கைது..!

நாங்குனேரியில் மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவத்தில் திமுக செயலாளர் உறவினர் உட்பட 6 பேர் கைது..!
Published on
Updated on
1 min read

நாங்குநேரியில் மாணவர்களை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் திமுக ஒன்றிய செயலாளர் உறவினர்   மற்றும் சக மாணவர்கள்  உட்பட ஆறு பேர் கைது.

 நாங்குநேரியில் மாணவர்களை அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் திமுக ஒன்றிய செயலாளரின் உறவினர்கள் உள்பட சக மாணவர்கள் ஆறு பேரை போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

 நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகியோர் வள்ளியூர் கண்கார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்தனர்.

 அதில் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த சின்ன துரைக்கும் நாங்குநேரியை சேர்ந்த அதே பள்ளியில் படித்த சில பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இடையே ஜாதி ரீதியான மோதல் ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

  இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு வீடு புகுந்து ஒரு கும்பல் சின்னத்துரையை அரிவாளால் வெட்டியது. அப்போது அதை தடுக்க சென்ற அவரது தங்கை சந்திரா செல்விக்கும் கையில் விட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அதிர்ச்சியில் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

 அதனை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் நேற்று நாங்குநேரியில்  நடந்தது. அப்போது போலீசார் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி கிருஷ்ணனின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நாங்குநேரி டிஎஸ்பி ராஜு தலைமையில் போலீசார் பொதுமக்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து  குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என உறுதி அளித்ததை ஏற்று கிருஷ்ணனின் உடல் அங்குள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 இந்நிலையில் நாங்குநேரி டிஎஸ்பி ராஜு விசாரணை நடத்தி சின்னத்துரையுடன் பள்ளியில் படித்து வந்த 17 வயதுடைய 12ம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் மற்றும் இரண்டு சிறார் உட்பட ஆறு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். அதில் ஒரு சிறுவன் நாங்குநேரி திமுக ஒன்றிய செயலாளர் சுடலைக்கண்ணுவின் உடன் பிறந்த சகோதரரின்  மகன்  என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com