கரூரில் உள்ள உணவகங்களில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் சோதனை நடத்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கரூரில் உள்ள 5 உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர். அதில் காலாவதியான பொருட்கள் மற்றும் சுமார் 20 கிலோ அளவில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் 5 உணவகங்களுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உணவகங்களில் ஷவர்மா சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.