"டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 397 கோடி முறைகேடு" அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு; மின்வாரியம் விளக்கம்!

"டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 397 கோடி முறைகேடு" அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு; மின்வாரியம் விளக்கம்!
Published on
Updated on
1 min read

மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என மின்வாாியம் விளக்கமளித்துள்ளது. 

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்மாற்றிகள் கொள்முதலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டை முன்வைத்தது. மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பின்னர் 397 கோடிக்கு மின்மாற்றிகள் கொள்முதலில் ஊழல் நடந்ததாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஒப்பந்தம் கோரிய நிறுவனங்கள் அனைத்தும் ஒரே தொகையை கோரி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அரசு அதிகாரிகளும் கூட்டுச்சதியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அவ்வறிக்கை சந்தேகம் எழுப்பி இருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது. அதில், மின்மாற்றிகளை கொண்டு செல்வதற்கான செலவையும் கொள்முதல் விலையுடன் சேர்த்து குறிப்பிடப்படுவதாகவும், மின்வாரிய செலவு தரவுகளில் உள்ள விலை, ஒப்பந்த புள்ளி நிர்ணயம் செய்யும் காலத்திற்கு ஏற்ப திருத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கோப்புகளை பரிசீலித்ததில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள மின்சார வாரியம், நிறுவனங்கள் தந்த விலைப்புள்ளியை விட 50 ஆயிரம் ரூபாய் வரை குறைப்பு செய்து தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com